மர்மமாக உயிரிழந்த யுவதி! விசாரணை அறிக்கை தொடர்பில் வெளியான தகவல் samugammedia

பேராதனை போதனா வைத்தியசாலையில் 21 வயதான யுவதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கை ஓரிரு வாரங்களில் வெளியிடப்படவுள்ளது. 

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல  இதனை குறிப்பிட்டுள்ளார்.

பேராதனை போதனா வைத்தியசாலையில் 21 வயதுடைய யுவதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்த 05 விசேட வைத்தியர்கள் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

குறித்த நிபுணர் குழு இன்று முதல் முறையாக கூடவுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்திருந்தார். 

இந்த நிலையில் குறித்த குழுவினர், இன்று முதல் விசாரணைகள் நடத்துவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.    

Leave a Reply