ஜனாதிபதிக்கு வந்த பொதியில் துண்டிக்கப்பட்ட கைவிரல்

 

துண்டிக்கப்பட்ட கைவிரலுடன் பிரான்ஸ் ஜனாதிபதிக்கு பொதியொன்று வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜனாதிபதி இமானுவேல் மெக்ரானின் எலிசி மாளிகைக்கே குறித்த பொதியானது வந்துள்ளது.

இந்நிலையில் அப்பொதியைப் பார்த்து  அதிர்ச்சியடைந்த பாதுகாப்புப்  படையினர்” இது மக்களால் அரசுக்கு  விடுக்கப்படும் மிரட்டல்” எனத் தெரிவித்துள்ளனர்.

மேலும் இது குறித்து தீவிர விசாரணைகளையும் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் 17 வயது  கறுப்பினச் சிறுவனொருவன் போக்குவரத்துப்  பொலிஸாரால் கொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து  பிரான்ஸ்  முழுவதும் அரசுக்கு எதிராக பல போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இதன்போது போராட்டக்காரர்களால் பொலிஸ் நிலையங்கள், பாடசாலைகள் போன்ற அரசுக்கு சொந்தமான பல கட்டிடங்கள் சேதப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply