எங்களை தொடர்ந்தும் ஏமாற்ற வேண்டாம்..! ஜனாதிபதியுடனான சந்திப்பில் சம்பந்தன் சீற்றம்..!samugammedia

‘எங்களை தொடர்ந்தும் ஏமாற்றாதீர்கள்’ என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கடும் கோபத்தை வெளிப்படுத்தினார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்பின் பேரில் தமிழ்த் தேசியக் கட்சிகளுடன் சந்திப்பு நேற்றுமாலை கொழும்பில் நடைபெற்றது.

இந்தச் சந்திப்பின் ஆரம்பத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதிகாரப் பகிர்வு குறித்து பேசவில்லை. மாறாக தாம் தயார்ப்படுத்திக் கொண்டுவந்த மனித உரிமைகள் சார் விடயம்,காணாமல் போனோர் பணிமனை, பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் தொடர்பாகவே விளக்கமளித்தார்.

அதிகாரப் பகிர்வு தொடர்பில் பேசப்படாத நிலையில், சினமுற்ற இரா.சம்பந்தன்  ‘எங்களை தொடர்ந்தும் ஏமாற்றாதீர்கள். அதிகாரப் பகிர்வு குறித்து முதலில் எங்களுடன் பேசுங்கள்…’ என்று தெரிவித்தார்.

இதன் பின்னரே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 13இன் நடைமுறை குறித்துப் பேசினார்.

Leave a Reply