நாட்டில் மீண்டும் சிக்கல்..!24 மணித்தியாலங்களில் இருவர் உயிரிழப்பு..!samugammedia

நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் 2 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

அதற்கமைய,இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 36 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளன.

இதேவேளை, டெங்கு அதிஅபாய வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள வைத்திய அதிகாரி பிரிவுகளின் எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளது.

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 53700 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேல் மாகாணத்தில் 26702 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply