வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அனைத்துலக கவியரங்கம்

உலக நாடுகளில் இருந்து அனைத்துலக கவிஞர்கள் ஒன்றிணைந்து கலந்து கொண்ட நேரடி ஒளிபரப்பு ஒன்று முகநூல் வழியாக பகிரப்பட்டுள்ளது.

குறித்த அனைத்துலக கவியரங்கத்தில், வலிந்து காணாமல் ஆக்கப் பட்டோரும் அவர் தம் உறவுகளும், அவர்களின் தவிப்பு, தாக்கம், அவர்களுக்கான அறம் போன்ற காரணிகள் முக்கிய அடிப்படை உணர்வாக காணப்படுகிறது.

கனேடிய தமிழ் மக்களின் நீதிக்கான இந்த கூட்டமைப்பு கடந்த ஆறு மாதங்களைக் கடந்து ஒவ்வொரு வெள்ளிக் கிழமைகளிலும் இடம்பெற்று வருகின்றது.

கடந்த இரண்டு வாரங்களுக்கு முதல் மலேசிய கவிஞர்கள் மலேசியாவில் ‘தமிழீழ விடுதலைக் கவிதைகள்’ என்ற தலைப்பில் செய்யப்பட்ட நிகழ்வானது எமக்கொரு புத்துணர்வாக காணப்பட்டது.

அதன் காரணமாக, வலிந்து காணாமல் ஆக்கப் பட்டோருக்கான அனைத்துலக பேரரங்கம் செய்ய வேண்டுமென்ற சிறு தீப்பொறி எழுந்தது.

இதன் பின்னணினியில், இந்த கவியரங்கம் தற்போது உலகளாவிய ரீதியில் நல் வரவேற்பை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *