வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வந்த நோயாளி..!வடிகாலில் சடலமாக மீட்பு..!samugammedia

களுத்துறை போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வந்த நோயாளி ஒருவர் இன்று (1) காலை வடிகாலில் சடலமாக மீட்கப்பட்டதாக தெற்கு களுத்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த நபரின் அடையாளம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும் அவர் 70 வயதுடையவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் நேற்று (31) அல்லது நேற்றுமுன்தினம் (30) வெளிநோயாளர் சிகிச்சைக்காக வந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

களுத்துறை தெற்கு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Leave a Reply