திருமலையில் தீயிட்டு எரிக்கப்பட்ட மீன்பிடிப் படகு..! விசமிகள் அட்டகாசம்..!samugammedia

திருகோணமலை மாவட்டத்தின் ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இலங்கை துறைமுகத்துவாரம் பகுதியில் இன்று செவ்வாய்கிழமை அதிகாலை மீன்பிடி படகொன்று இனம் தெரியாத நபர்களால் தீயிட்டு கொளுத்தப்பட்டு முழுமையாக சேதமடைந்துள்ளதாக ஈச்சிலம்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த குறித்த மீன்பிடி படகே இவ்வாறு தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தின் மூலம் படகின் உரிமையாளர் பல லட்சம் நஷ்டங்களை எதிர்நோக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.

குறித்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஈச்சிலம்பற்று பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply