மக்களுக்காக மக்கள் நடத்தும் நீதிக்கான நடைபயணம்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் அனைத்துலக நாளை முன்னிட்டு மக்களுக்காக மக்கள் நடத்தும் நீதிக்கான நடைப்பயணம் நாளை ஆரம்பமாகவுள்ளது.

தாயகத்தில் ஸ்ரீலங்கா அரச படைகளால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் முன்னெடுக்க்கும் போராட்டங்களிற்கு வலுசேர்க்கும் முகமாகவும் சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் நாளை முன்னிட்டு அனைத்து மார்க்க வழிபாட்டுப் பிராத்தனையுடன் ஞாயிறு 29.08.2021 அன்று தமிழ் இன அழிப்பு நினைவுத் தூபி அமையவிருக்கும் சிங்குசி பாக்கில் இருந்து இந்த நடைபயணம் ஆரம்பமாகிறது.

அதன்படி, நாளை ஞாயிற்றுகிழமை (29.08.2021) காலை 8 மணிக்கு சிங்குசி பாக் Chinguacousy Park இல் ஆரம்பிக்கப்பட்டு, நாளை மறுதினம் 30.08.2021 அன்று நிறைவடையவுள்ளது.

தாயகத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் நடத்திக் கொண்டிருக்கும் தொடர் போராட்டங்களுக்கு வலுச்சேர்க்கும் முகமாக தமிழர் மனித உரிமைகளுக்கான கண்காணிப்புச் சமூகம் ஏற்பாடு செய்திருக்கும் மாபெரும் கவனயீர்ப்புப் பேரணியில் கலந்து கொள்ளுமாறு அமைப்புகள், ஊர்ச்சங்கங்கள், மாணவர் சங்கங்கங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறது. இதற்கு ஆதரவாக கனடா தமிழ் அமைப்புக்களின் நீதிக்கான கூட்டமைப்பு தார்மீக ஆதரவை வழங்கி நிற்கின்றது.

கனடியத் தமிழ் காங்கிரசு இளங்கோ மற்றும் கனடியத் தமிழர் தேசியவை பேச்சாளர் தேவசபாபதியினூடாக தொடர்பு கொண்டு ஆதரவினை வழங்கும்படி வேண்டியுள்ளோம். என்று கூறும் நடைபயணக் குழுவினர் ஈழமுரசால் வலிந்து காணமலாக்கப்பட்டோர் தினத்தில் அழிக்கப்படும் சாட்சியங்கள், மற்றும் காணமலாக்கப்பட்ட சிறுவர்களின் விபரங்கள் அடங்கிய ஆங்கில விவரண ஆவண வெளியீட்டினையே நடைபயணத்தின்போது விநியோகிக்க உள்ளனர்.

இந்த பேரணிக்கு வடக்கு கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்க பிரதிநிதிகள் தமது ஆதரவை தெரிவித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *