நாட்டின் இளைஞர் யுவதிகளை சீனி நோயில் இருந்து பாதுகாக்க சீனி பாவனையை குறைக்க வேண்டும் என ஆளும் மொட்டு கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சஹன் பிரதீப் தெரிவித்துள்ளார்.
சீனி விலை அதிகரிப்பு குறித்து ஊடகங்களில் பலர் பேசுவதாகவும் ஆனால் அவர்களில் பலர் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டு மருந்து உட்கொள்வதாகவும் சஹன் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு மருந்து உட்கொள்ளும் நபர்களே சீனி தேவை என கேட்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நீரிழிவு நோயிலிருந்து இளையோர்களை மீட்க சீன பயன்பாடு குறைக்கப்பட வேண்டும் என சஹன் பிரதீப் கூறினார்.





