குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் புதிய விதிமுறைகளின்படி விசா கட்டணம் மற்றும் தண்டப்பணம் என்பனவற்றில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலக்கம் 2241/37 எனும் அதி விசேட வர்த்தமானிப் பத்திரிகை மூலம் 2021 ஆகஸ்ட் மாதம் 18 ஆம் திகதி பிரசுரிக்கப்பட்டுள்ள புதிய குடிவருவோர் மற்றும் குடியகல்வோர் ஒழுங்கு விதிகளுக்கு அமைய வீசா கட்டணங்கள் மற்றும் தண்டப்பணம் என்பன திருத்தப்பட்டுள்ளதை குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனினும் , இலங்கையில் விசா இல்லாமலோ அல்லது விசா செல்லுபடியாகும் காலம் நிறைவடைந்த பின்னரோ தங்கியிருப்பவர்களுக்கு விசா கட்டணத்துக்கு மேலதிகமாக 500 அமெரிக்க டொலர்களை செலுத்த வேண்டுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் திருத்தப்பட்ட விசாக்கட்டணம் தண்டப்பணம் பின்வருமாறு…





