
அடையாளம் காணப்பட்டவர்களுக்கு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களுக்குள் கொரோனா தடுப்பூசியின் 3 வது டோஸை வழங்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக மருத்தாக்கல் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
அதன் தலைவர் ஸ்பெஷலிஸ்ட் டாக்டர் பிரசன்ன குணசேன இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், கடுமையான நோய்வாய்ப்படும் அபாயம் உள்ளவர்கள் மற்றும் தொடர்ந்து கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களுக்கு டோஸ் கொடுக்க தேவையான பின்னணி தயார் செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.




