தியாகி அறக்கொடை நிறுவனத்தால் கொவிட் – 19 நிவாரண நிதியத்திற்காக 10 மில்லியன் ரூபா வழங்கிவைப்பு

பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி மற்றும் யாழ். மாவட்டத்தின் கொரோனா
கட்டுப்பாட்டு மையத்தின் ஏற்பாட்டாளருமான மேஜர் ஜெனரல் ஜகத் கொடித்துவக்கு
அவர்களின ; ஏற்பாட்டின் கீழ் 2021 ஆவணி மாதம் 26 அன்று தியாகி அறக்கொடை
நிறுவனத்தின் நிறுவுனரும் தலைவருமான வாமதேவ தியாகேந்திரன் அவர்களினால்
ஜனாதிபதி அவர்களினால் ஆரம்பிக்கப்பட்ட கொவிட் – 19 நிவாரண நிதியத்திற்காக 10
மில்லியன் ரூபாவினை நிவாரண நிதியாக வழங்கிவைத்தார்.

நாட்டினுள் தீவிரமாக பரவிவருகின்ற கொவிட் – 19 வைரஸ்ஸினை கட்டுப்படுத்துதல்
மற்றும் அதற்காக மேற்கொள்ளப்படுகின்ற நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தும் முகமாக
பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி மற்றும் யாழ். மாவட்டத்தின் கொரோனாக்
கட்டுப்பாட்டு மையத்தின் ஏற்பாட்டாளருமான மேஜர் ஜெனரல் ஜகத் கொடித்துவக்கு
அவர்களிடம் யாழ். பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தலைமையகத்தில்
அதிகாரபூர்வமாக கையளிக்கப்பட்டது.

குறித்த உதவிக்காக யாழ். பாதுகாப்புப் படைகளின்
கட்டளைத் தளபதி இதயபூர்வமாக நன்றிகளை செலுத்தினார். அதுமாத்திரமல்லாது
வாமதேவ தியாகேந்திரன் அவர்கள் பாதுகாப்புப் படைத் தலைமையகத்துடன் இணைந்து
யாழ். பிரதேசத்தில் வாழ்கின்ற பல வறிய குடும்பங்களிற்கு பல்வேறுபட்ட உதவிகள்
செய்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply