நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியின் சென்ஜோன் டிலரி பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்று வீதியை வி்ட்டு விலகி ஐம்பது அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று மதியம் 12.45 மணியளவில் இடம்பெற்ற இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.
பொகவந்தலாவ மோரா தோட்டப்பகுதியில் இருந்து அட்டன் பகுதிக்கு சென்று கொண்டிருந்த வேளையில் இந்த முச்சக்கரவண்டியே விபத்துக்குள்ளானது.
முச்சக்கர வண்டியின் சாரதி அவரது மனைவி, ஒன்றரை வயது குழந்தை ஆகியோரே காயமுற்ற காயமுற்ற நிலையில் கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.