யாழில் இன்று அறுவரை பலியெடுத்தது கொரோனா

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் மூவர் உள்பட மாவட்டத்தில் மேலும் 6 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் இன்று உயிரிழந்துள்ளனர்.

மேலும் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஆனைக்கோட்டையைச் சேர்ந்த 89 வயதுடைய பெண் ஒருவரும் யாழ்ப்பாணம் அரசடி வீதியைச் சேர்ந்த 79 வயதுடைய ஆண் ஒருவரும் முல்லைத்தீவைச் சேர்ந்த 33 வயதுடைய இஸ்லாமிய ஆண் ஒருவரும் உயிரிழந்தனர்.

அத்தோடு அச்சுவேலியைச் சேர்ந்த 80 வயதுடைய ஆண் ஒருவர் இன்று வீட்டில் உயிரிழந்தார் என்று கோப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனை தெரிவித்தது.

இதேவேளை, மந்திகை ஆதார மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 34 வயதுடைய பெண் ஒருவர் உள்பட இருவர் உயிரிழந்தனர் என்று இன்று பிற்பகல் செய்தி வெளியிடப்பட்டது.

இதன்மூலம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 231ஆக உயர்வடைந்துள்ளது.

Leave a Reply