இலங்கைக்குள் நிபா வைரஸ் நுழைந்திருக்கலாம் – சுகாதார பரிசோதகர்கள் எச்சரிக்கை..! samugammedia

பல நாடுகளில் பரவி வரும் நிபா வைரஸ் நாட்டிற்குள் நுழைவதைத் தடுக்க துறைமுகத்திலோ அல்லது விமான நிலையத்திலோ பாதுகாப்பு அமைப்பு ஏற்படுத்தப்படவில்லை என பொதுப் பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

எனவே, இந்த வைரஸ் தெரிந்தோ அல்லது தெரியாமல் நாட்டுக்குள் தற்போது நுழைந்திருக்கலாம் என சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

இந்த வைரஸ் நாட்டிற்குள் நுழைவதை தடுப்பதற்கு துறைமுகத்தில் அல்லது விமான நிலையத்தில் எந்த வகையிலும் பாதுகாப்பு நடைவடிக்கைகளும் எடுக்கவில்லை.

இந்தியாவில் இருந்து சட்டவிரோதமான முறையில் பாரிய அளவிலான மக்கள் நாட்டிற்குள் வந்திருக்கலாம்.

இவ்வாறான நிலையில் இதுவரையில் நாட்டிற்குள் நிபா வைரஸ் நுழைந்திருக்கலாம், நுழையும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது எனவும் எச்சரித்துள்ளார்.

Leave a Reply