
அரசாங்கம் தற்போது வர்த்தமானியில் வெளியிட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்திற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. சட்டத்தரணிகளும் மனித உரிமை அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் இச் சட்டமூலம் தற்போது அமுலிலிருக்கும் பயங்கரவாத தடைச் சட்டத்தை விடவும் கொடியது என இதனை வர்ணித்துள்ளனர். உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலத்தை வாபஸ் பெறுமாறும், பயங்கரவாதத்துக்கு எதிரான எந்தவொரு சட்டத்தையும் வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறும் தன்மை மற்றும் சகல தரப்பினருடனான விரிவான கலந்துரையாடல்கள் ஆகியவற்றின் அடிப்படையில் தயாரிக்குமாறும் மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம் அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளது. அரசாங்கத்தினால் கடந்த மார்ச் […]





