தமிழர் தேசமெங்கும் எழுச்சி…! தேராவிலில் இருந்து நல்லூரை நோக்கி தியாகதீபம் திலீபனின் நினைவேந்தல் பேரணி ஆரம்பம்…!samugammedia

தியாகதீபம் திலீபனின் 36ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் இருந்து யாழ்ப்பாணத்தை நோக்கி ஊர்தி பவனியொன்று தற்போது ஆரம்பமாகியுள்ளது.

யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் இடம்பெறும் தியாகதீபம் திலீபனின் 36ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வின் கலந்து கொள்வதற்காக தாயக அரசியல் துறையினரின் ஒழுங்கமைப்பில் முல்லைத்தீவு கிளிநொச்சி இளைஞர்களை குறித்த நிகழ்வில் இணைத்து கொள்ளும் முகமாக இந்த ஊர்தி பவனி முன்னெடுக்கப்படுகிறது.
விசுவமடு தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் சுடர் ஏற்றி, மலர் தூவி, அகவணக்கம் செலுத்தியதை  விசுவமடு , தர்மபுரம், பரந்தன், ஆனையிறவு, பளை, சாவகச்சேரி ஊடாக  குறித்த ஊர்தி யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியை சென்றடைந்தது அங்கு இடம்பெறும் நினைவேந்தல் நிகழ்வில்  கலந்து கொள்ளவுள்ளனர்.

Leave a Reply