கனடா பயங்கரவாதிகளின் உறைவிடம் – அமைச்சர் அலிசப்ரி தெரிவிப்பு! samugammedia

பயங்கரவாதிகள் தனது பாதுகாப்பு உறைவிடமாக கனடாவை தேடிக்கொண்டுள்ளதாகவும் கனேடிய பிரதமர் எவ்வித சாட்சியங்களும் இன்றி மோசமான குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதாகவும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்றி தெரிவித்துள்ளார்.

கனேடிய பிரதமர் தொடர்ந்தும் உறுதிப்படுத்தாத குற்றச்சாட்டை முன்வைப்பதாகவும் அவரது கருத்துக்கள் குறித்து தான் ஆச்சரியப்படவில்லை எனவும் அமைச்சர் அலி சப்றி ஊடகங்களிடம் கூறியுள்ளார்.

தமிழ் இனப்படுகொலை பற்றிய கனேடிய பிரதமரின் கருத்து கண்டிக்கப்பட வேண்டியது

கனடாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள ராஜதந்திர மோதல் குறித்து எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே வெளிவிவகார அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை சம்பந்தமாகவும் கனேடிய பிரதமர் சுமத்தும் குற்றச்சாட்டுக்கள் முற்றிலும் பொய்யானவை, இலங்கையில் எவ்வித இனப்படுகொலைகளும் நடக்கவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *