ரயிலுக்காக காத்திருந்த பயணி அமர்ந்திருந்த நிலையிலேயே உயிரிழப்பு..! samugammedia

 

ஹட்டன் ரயில் நிலையத்தில் அமர்ந்திருந்த பயணி ஒருவர் கதிரையில் அமர்ந்திருந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச் சம்பவம் இன்று திங்கட்கிழமை (02) இடம்பெற்றுள்ளது.

மஸ்கெலியா, நல்லத்தண்ணி முல்லுகாமம் கீழ் பிரிவை வசிப்பிடமாகக் கொண்ட பி.எஸ். ஆறுமுகம் (வயது 70) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

ரயில் வரும் வரை பயணிகள் ஓய்வெடுக்கும் கதிரையில் அமர்ந்திருந்த நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளார்.

அவருடைய உடல், பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா – கிளங்கன் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

Leave a Reply