பிள்ளையார் கோவிலில் விபரீத முடிவெடுத்து உயிர்மாய்த்த பூசகரின் உதவியாளரான 16 வயது சிறுவன்..! samugammedia

ஹட்டன், கிளவட்டன் தோட்ட பிள்ளையார் ஆலய அறையொன்றில் 16 வயது சிறுவன் கழுத்தில் சுருக்கிட்டு உயிரிழந்துள்ளதாக நோட்டன் பொலிஸ் தெரிவிக்கின்றனர்.

இன்று காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இது குறித்து நோட்டன் பொலிஸாருக்கு கிடைக்க பெற்ற தகவலை தொடர்ந்து அவ் இடத்திற்கு பொலிசார் சென்றுள்ளனர்.

குறித்த ஆலயத்தின் குருக்களின் உதவியாளராக இருந்து வந்த சிறுவன் பலாங்கொடை பிரதேசத்தைச் சேர்நதவர் என தெரியவந்தள்ளது. 

சம்பவத்திற்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்தள்ளனர் என நோட்டன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

Leave a Reply