பருத்தித்துறையை சேர்ந்த பாடசாலை ஆசிரியர் ஒருவர் தாக்கப்பட்டதாக கூறி பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கற்கோவளம் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று செவ்வாய்க்கிழமை (03) காலை 7.15 மணியளவில் பாடசாலைக்கு முன்பாக வைத்து சிலரால் ஆசிரியர் தாக்கப்பட்டமை அடுத்தே குறித்த ஆசிரியர் சிகிச்சைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த பாடசாலையில் கல்வி கற்றுவரும் மாணவி ஒருவர் குறைவான வருகையுடன் காணப்பட்ட நிலையில் அதுதொடர்பில் கண்டித்துள்ளதை அடுத்தே இத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிய வருகிறது.
குறித்த மாணவியின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் உள்ளிட்ட தரப்பினரால் குறித்த ஆசிரியர் தாக்கப்பட்டதை அடுத்து சிகிச்சைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பருத்தித்துறை பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது





