வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் பண்பாட்டுப் பேரவையும், பூநகரி பிரதேச செயலகமும் இணைந்து நடாத்திய பிரதேச பண்பாட்டுப் பெருவிழா இன்று மாலை கிளிநொச்சி முக்கொம்பன் கிராம அலுவலர் பிரிவில் இடம்பெற்றது.










பூநகரி பிரதேச செயலாளரும், பண்பாட்டுப் பேரவைத் தலைவருமான த.அகிலன் தலைமையிலான இந் நிகழ்வில், பிரதம விருந்தினராக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் கலந்து கொண்டார்.
நிகழ்வில் பாரம்பரிய கலாச்சார உடையணிந்தும், கும்மி ஆட்டம் காவடி ஆட்டம், கரகாட்டம், கோலாட்டம் என பல்வேறு கலாச்சார நிகழ்வுகள் நடைபெற்றதுடன், பண்பாட்டை வெளிப்படுத்தும் பல்வேறுபட்ட கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.
















