கிளிநொச்சி வாகன போக்குவரத்து பிரிவு வெளியிட்டுள்ள அறிவிப்பு!

கிளிநொச்சி மாவட்ட மோட்டார் வாகன போக்குவரத்து பிரிவு அறிவிப்பு ஒன்றினை விடுத்துள்ளது

கிளிநொச்சி மாவட்ட மோட்டார் வாகன போக்குவரத்து பிரிவில் எழுதுதல், வாசித்தல், திறன் குறைந்தவர்களுக்கான வாய்மொழிப்பரீட்சையினை எதிர்வரும் 06.10.2023 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடாத்துவதற்கு மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எனவே மேற்படி காரணங்களின் நிமித்தம் இதுவரை சாரதி அனுமதிப்பத்திரம் பெறத்தவறியவர்கள் இவ் அரிய சந்தர்ப்பத்தை தவறவிடாது பயன்படுத்திக்கொள்ளுமாறு கிளிநொச்சி மாவட்ட மோட்டார் வாகன போக்குவரத்து பிரிவின் பிரதம மோட்டார் வாகன பரிசோதகர் G.H.D.K விஜயசேகர அறிவித்துள்ளார்.

மேலும், பரீட்சைக்கு தோற்றுவதற்கு முன் A9 வீதி, கிளிநொச்சி பழைய கச்சேரி வளாகத்தில் அமைந்துள்ள  மோட்டார் வாகன போக்குவரத்து பிரிவின் மாவட்ட காரியாலயத்துடன் தொடர்பு கொண்டு பதிவுகளை மேற்கொள்வதுடன், மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.

The post கிளிநொச்சி வாகன போக்குவரத்து பிரிவு வெளியிட்டுள்ள அறிவிப்பு! appeared first on Today Jaffna News – Jaffna Breaking News 24×7.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *