யாழில் பதற்றம் – பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையவர் மீது துப்பாக்கிச் சூடு! samugammedia

 

பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய சந்தேகநபர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

குறித்த சந்தேகநரை பொலிஸார் கைது செய்ய சென்ற போது, அவர் பொலிசாரை தாக்கி விட்டு தப்பிச் செல்ல முற்பட்டுள்ளார்.

இந்நிலையில் பொலிசார் குறித்த சந்தேகநபர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

காலுக்கு கீழாகவே துப்பாக்கி சூடு நடாத்தியுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply