பொலிஸ்மா அதிபர் விக்கிரமரத்னவின் பதவிக்காலம் மீண்டும் நீடிப்பு…!samugammedia

புதிய பொலிஸ் மா அதிபர் ஒருவரை நியமிப்பதில் தொடர்ந்து காணப்படும் இழுபறி நிலையை அடுத்து தற்போதைய பொலிஸ்மா அதிபர் விக்ரமரத்னவிற்கு மேலும் மூன்று வார கால சேவை நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்தப் பதவி நீடிப்பை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று வழங்கினார்.

விக்ரமரத்னவிற்கு இரண்டாவது தடவையாக வழங்கப்பட்ட 3 மாத கால சேவை நீட்டிப்பு ஒக்டோபர்9 முடிவடைந்தது.

இதையடுத்தே நேற்று மீண்டும் மூன்றாவது தடவையாக அவருக்கு மூன்று வார கால சேவை நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது.

Leave a Reply