அவிசாவளை இரட்டைக் கொலை சம்பவத்துடன் தொடர்புவர் உயிரிழப்பு…!samugammedia

அவிசாவளை பகுதியில் இடம்பெற்ற இரட்டைக் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் காவல்துறையினருடனான மோதலில் உயிரிழதுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, அவிசாவளை – தல்துவ பகுதியில் கடந்த செப்டெம்பர் 20 ஆம் திகதி உந்துருளியில் பிரவேசித்த இருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்ததுடன், மேலும் இருவர் காயமடைந்தனர்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய உந்துருளியை செலுத்திய நபரே இவ்வாறு உயிரிழந்ததாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த நபர் அவிசாவளை காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட மணியங்கம – அத்பந்திய பகுதிக்கு இன்று அதிகாலை விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டபோது, காவல்துறையினருடன் ஏற்பட்ட மோதலில் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply