யாழில் சோகத்தில் முடிந்த காதல் விவகாரம்…! காதலனுக்கு ஏற்பட்ட நிலை…!samugammedia

காதலித்த பெண் தன்னை திருணம் செய்யாவிட்டால்   உயிர் மாய்க்கவுள்ளதாக கூறியதால் பீதியடைந்த இளைஞர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் நெளுங்குளம் வீதி கொழும்புத்துறையைச் சேர்ந்த 20  வயதுடைய இளைஞர் ஆவார்.

காதலித்த பெண்ணுக்கு  வயது குறைவு என்பதால் தந்தையார் மகனை பெண்ணுடன் கதைக்க வேண்டாம் எனவும் வயது வந்ததும் திருமணம் குறித்து பேசலாம் என பெண் வீட்டாரிடமும் கூறியுள்ளார். அது குறித்த பெண்ணுக்கு பிடிக்கவில்லை.

இதனால் தன்னை திருமணம் செய்யாவிடில் தான் தவறான முடிவெடுக்கவுள்ளதாக பெண் தனது காதலனுக்கு  தொலைபேசியூடாக தகவல் அனுப்பியுள்ளார்.

இதனால் பீதியடைந்த இளைஞர் நேற்று (15) மாலை தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் தொடர்பில் யாழ். போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை  மேற்கொண்டார்.

இந்நிலையில் உயிரிழந்த இளைஞனின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply