யாழில் பக்தர்கள் பரவசம்…! ஆலயமொன்றில் திடீரென காட்சி தந்த சிவப்பு நாகம்…!samugammedia

யாழ் வலிகாமம் பகுதியில் உள்ள ஆலயமொன்றில் நாகபாம்பு ஒன்று திடீரென தோன்றி பக்தர்களுக்கு காட்சியளித்துள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ் சண்டிலிப்பாய்  சீரணி நாகபூஷணி அம்பாள்  ஆலயத்தின் தீர்த்தக்கேணியில் சிலதினங்களுக்கு முன்னர் சிவப்பு நிறத்திலான நாகம் ஒன்று கேணியில் தீர்த்தமாடியபடி காட்சியளித்துள்ளது.

இந்நிலையில் கேணியில் தீர்த்தமாடிய சிவப்பு நாகத்தை அடியவர்கள் பலர் கண்டு பரவசமடைந்தனர்.

குறித்த ஆலயத்தில் நீண்டகாலமாக நீதிமன்ற வழக்கு நடைபெற்று வந்தநிலையில் குறித்த வழக்கின் தீர்ப்பு சில தினங்களுக்கு முன்னர் நீதிமன்றினால் வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி,  குறித்த ஆலயத்தின் அனைத்து பொறுப்புகளையும் தர்மகர்த்தா சபையிடம் ஒப்படைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் குறித்த தீர்ப்பு வெளியாகி சில நாட்களில் நாகபூஷணி அம்பாள் செந்நிற நாகமாக காட்சியளித்தமை பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.

 

Leave a Reply