மலேசியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கையைச் சேர்ந்த இருவர் உயிரிழப்பு…!samugammedia

மலேசியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கையைச் சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மலேசியாவின் கோலாலம்பூரில் இலங்கை தம்பதியினர் ஓட்டிச்சென்ற கார் மற்றுமொரு காருடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தில் தம்பதியினர் உயிரிழந்துள்ளதுடன்  காரில் இருந்த அவர்களது மகளுக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை.

குறித்த விபத்தில் உயிரிழந்த பெண்ணுக்கு 33 வயது எனவும் அவரது கணவருக்கு 35 வயது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவர்கள் இருவரும் மலேசியாவில் மென்பொருள் பொறியியலாளராக பணியாற்றி வருவதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் விபத்தில் உயிரிழந்த தம்பதியினரின் சடலங்கள் இலங்கைக்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

Leave a Reply