கல்முனையில் பாடசாலை மாணவர்களுக்கு போதை மாத்திரை…! களத்தில் இறங்கிய விசேட அதிரடிப்படை..! சிக்கிய நபர்…!samugammedia

நீண்ட காலமாக பாடசாலை மாணவர்களுக்கு போதை குளிசைகளை  விநியோகித்து வந்த சந்தேக நபர் தொடர்பில் கல்முனை விசேட அதிரடிப்படையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

கல்முனை விசேட அதிரடிப்படை முகாமிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றினை அடுத்து  நேற்றிரவு(25) காரைதீவு  பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அம்பாறை காரைதீவு பிரதான வீதியில் வைத்து சந்தேக நபர் 500 போதை குளிசைகளுடன் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட தேடுதலில் கைதானார்.

இவ்வாறு கைதான நபர் அம்பாறை திசாபுர பகுதியை சேர்ந்த 28 வயது  மதிக்கத்தக்கவர் என்பதுடன் சந்தேக நபரிடமிருந்து 500 போதை குளிசைகள்  உட்பட  சந்தேக நபர்  பாவித்த கைத்தொலைபேசி  என்பன  விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இச்சோதனை நடவடிக்கையின் போது   விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜெயசுந்தரவின் பணிப்புரைக்கமைய அம்பாறை வலயக்கட்டளை அதிகாரி சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்  ஏ.டி.டி நெத்தசிங்கவின்  அறிவுறுத்தலுக்கமைய  மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர்   டி.சி வேவிடவிதான  ஆகியோரின் வழிகாட்டலில் கல்முனை விசேட அதிரடிப்படை முகாம்   பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஆர்.ஏ.டி.சி.எஸ்.ரத்னாயக்க  தலைமையிலான  அதிகாரிகள் இந்நடவடிக்கையை முன்னெடுத்து சந்தேக நபரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட நபர் உள்ளிட்ட  சான்று பொருட்களுடன் காரைதீவு  பொலிஸாரிடம் நீதிமன்ற நடவடிக்கைக்காக பாரப்படுத்தியதுடன் விசேட அதிரடிப்படையினர் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டுள்ளனர்.

Leave a Reply