வடமராட்சி – உடுப்பிட்டி பகுதியில் இளைஞர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
உடுப்பிட்டியைச் சேர்ந்த 27வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நேற்று முன்தினம் (26) இரவு தவறான முடிவெடுத்த நிலையில் வீட்டாரால் மீட்கப்பட்டு வல்வெட்டித்துறை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு சடலம் கொண்டுவரப்பட்டு நேற்று (27) பருத்தித்துறை மரண விசாரணை அதிகாரி சதானந்தம் சிவராஜா விசாரணை மேற்கொண்டார்.
இதன்போது உயிரிழந்த இளைஞர் வெளிநாட்டுக்கு செல்வதற்கு பணம் கட்டியிருந்ததாகவும் ,காதல் சம்பந்தம் இருந்ததாகவும் விசாரணை தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.