13 வயது சிறுவன் மீது பாலியல் துஷ்பிரயோகம் செய்த இரண்டு பிக்குகளுக்கு சிக்கல்..! samugammedia

 

மத்துகம பிரதேசத்தில் 13 வயது சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் இரண்டு பிக்குகள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைதான பிக்குகள் மத்துகம நவுத்துடுவ யதோல பிரதேசத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.

இந்த இருவர் மீதும் கிடைக்கப்பட்ட முறைப்பாட்டின் பேரில் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தின் பெண் தலைமை பொலிஸ் பரிசோதகர் ஹேமமாலி சந்தேக நபர்களை கைது செய்துள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுவன் மருத்துவ பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

இந்நிலையில், பிக்குகள் இருவரும் மத்துகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்துடன் இணைந்து மத்துகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *