எல்ல பகுதியில் துப்பாக்கி சூடு…! ஒருவர் காயம்…!samugammedia

எல்ல பகுதியில் சற்றுமுன்னர் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று  இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

எல்ல பகுதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றுக்கு அருகில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளார்.

இச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தார்.

அதேவேளை நாட்டின் பல பகுதிகளிலும் கடந்த சில மாதங்களாக இனந்தெரியாத நபர்களின் துப்பாக்கி சூட்டுச் சம்பவங்கள் பதிவாகி வருகின்றமை பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply