முல்லைத்தீவில் மின்னல் தாக்கி சகோதரர்கள் மூவர் படுகாயம்…!samugammedia

இடிமின்னல்த் தாக்கத்துக்குள்ளான மூவர் புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்துக்குட்பட்ட உடையார் கட்டு குரவில் கிராமத்தில் மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி ஒரே குடும்பத்தினை சேர்ந்த சகோதரர்கள் மூவர் படுகாயம் அடைந்துள்ளனர்.

படுகாயம் அடைந்தவர்கள் புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பருவமழை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் இடிமின்னல் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பாக நடந்து கொள்ள வேண்டும் என அனர்த்த முகாமைத்துவப் பிரிவினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Leave a Reply