இலங்கை கிரிக்கெட் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண அமைச்சரவை உபகுழு…! samugammedia

இலங்கை கிரிக்கெட் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் அமைச்சரவை உபகுழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போது, கிரிக்கெட் பிரச்சினை பற்றியும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதன்போதே இலங்கை கிரிக்கெட்டில் நிலவும் பிரச்சினைகளை உடனடியாக தீர்ப்பதற்கான வழிமுறைகளை ஆராய்ந்து அறிக்கை முன்வைக்க அமைச்சரவை உப குழு அமைக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவை உப குழுவில் அமைச்சர்களான காஞ்சன விஜேசேகர, அலிசப்ரி, மனுச நாணயக்கார, டிரான் அலஸ்,  ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply