மன்னாரில் 40இலட்சம் ரூபா பெறுமதியான முக்கிய பொருளுடன் விற்பனை முகவர் கைது…!samugammedia

 மன்னாரில் நீண்ட காலமாக போதைபொருள் விற்பனையில் ஈடுபட்ட  நபர் மற்றும் அவரிடம் இருந்து போதைப்பொருளை கொள்வனவு செய்த நபர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடம் இருந்து ஐஸ் வகை போதைப் பொருளும் இன்று (06) காலை கைப்பற்றப்பட்டுள்ளது.

மன்னார்,புதுக்குடியிருப்பு,எருக்கலம்பிட்டி,தாராபுரம் உட்பட்ட பல பகுதியில் நீண்டகாலமாக போதை பொருள் விற்பனையாளராகவும் விற்பனை முகவராகவும் செயற்பட்ட  குறித்த நபர் மன்னார் குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினரால் இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்

குறித்த நபர் தொடர்பில் இன்றைய தினம் மன்னார் குற்றப்புலனாய்வு பிரிவின் அதிகாரி விபுர்த்திக்கு கிடைத்த இரகசிய தகவில் பிரகாரம் மன்னார் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் சந்திரபாலவின் பணிப்புரைக்கு அமைவாக உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஹேரத்தின் ஆலோசனையின் பெயரில் குற்றப்புலனாய்வு பிரிவு சார்ஜன் ரத்ணமனல தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட குறித்த நபர் கைது செய்யப்பட்டதுடன் அவரிடம் போதை பொருளை கொள்வனவு செய்தவரும் கைது செய்யப்பட்டுள்ளார்

கைது செய்யப்பட்ட இருவரும் மன்னார் புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த 31, மற்றும் 20 வயதுடைய நபர்கள் என்பதுடன் புதுகுடியிருப்பு பாடசாலைக்கு அருகில் விற்பனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போதே இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர் 

கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து 21 கிராம் 9 மில்லி கிராம் ஐஸ் ரக போதை பொருள் மற்றும் 50000 ரூபா ரொக்கப்பணம் மற்று 2 கைபேசிகளும் மீட்கப்பட்டுள்ளது 

அதே நேரம் பிரதான சந்தேக நபருக்கு 1 கிலோ ஐஸ் போதை பொருள் விற்பனைக்காக வந்த நிலையில் 21 கிராம் போதை பொருளே தற்போது கைப்பற்றப்பட்டுள்ள நிலையில் மிகுதி போதை பொருட்களை தேடும் நடவடிக்கையில் மன்னார் பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினர் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *