கமலின் மானத்தை காற்றில் பறக்க விட்ட பிந்து மாதவி!

பிக் பொஸ் பிரபலமும் நடிகையுமான பிந்து மாதவி,  உலக நாயகள் கமல் ஹாசனின் பிறந்த நாளான நேற்று அவருக்கு வாழ்த்துத் தெரிவித்து அவருடன் எடுத்த புகைப்படமொன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

குறித்த புகைப்படத்தில் கமல் ஹாசனின் காற்சட்டை ஸிப்பானது திறந்த நிலையில் இருந்துள்ளமை பெரும் பேசுபொருளாகியுள்ளது.

இந்நிலையில் ”குறித்த புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு பிந்து மாதவி கமல் மானத்தை காற்றில் பறக்க விட்டுள்ளார்” என இணையவாசிகள் பலரும் விமர்சித்து வருகின்றனர்.

குறிப்பாக பிக்பொஸ் புகழ் பிரதீப்பின் ரசிகர்கள் பலரும் ”கழிவறை கதவை மூடவில்லை என பிரதீப்பை கமல் வெளியேற்றினாரே. தனது காட்சட்டை ஸிப்பை போடாமல் நடிகையுடன் இப்படி போஸ் கொடுப்பது சரியா? எனக் கேள்வி எழுப்பி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *