2024 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்டம் 41 வாக்குகளால் நிறைவேற்றம்…! samugammedia

கடந்த நவம்பர் மாதம் 13 ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால்  சமர்பிக்கப்பட்டுள்ள வரவுசெலவுத்திட்டமானது மேலதிகமாக 41 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

இதற்கு ஆதரவாக 122 வாக்குகளும், எதிராக 81 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளதுடன் ஒருவர் வாக்களிக்கவில்லை.

அத்துடன்  ஸ்ரீ லங்கா  பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக் கட்சி, ,லங்கா  தொழிலாளர் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் உள்ளிட்ட ஆளும் கட்சியினரே குறித்த வரவுசெலவுத்திட்டத்துக்கு ஆதரவளித்துள்ளனர் 

இதேவேளை டயானா கமகே, சுஜித் சஞ்ஜய , மற்றும் ரோஹன பண்டார ஆகியோருக்கும் இந்த வாக்கெடுப்பில் பங்களிக்க சந்தர்ப்பம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply