பொதுஜன பெரமுனவில் முக்கிய மாற்றம் : இன்று வெளியாகும் முக்கிய அறிவிப்பு..!samugammedia

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இன்றையதினம் நாட்டுக்கும் கட்சிக்கும் முக்கிய செய்தியொன்றை வழங்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுனவின் இரண்டாவது தேசிய மாநாடு இன்றையதினம் கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் இடம்பெறவுள்ளது.

இந்நிலையில் இவ்விடயம் தொடர்பாக ஊடகங்களுக்குத் கருத்து தெரிவித்த அவர்

 “முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அரசியல் ரீதியில் தோற்றுவித்த நெருக்கடிகளினால் பாரிய விளைவுகளை எதிர்கொண்டோம்.

அரசியலமைப்பின் ஊடாக இதற்கு தீர்வு கண்டுள்ளோம் என குறிப்பிட்டார்.

கோட்டாபய ராஜபக்ஷ இல்லை என்பதற்காக நாங்கள் அரசியலில் ஈடுபட கூடாது என்பதொன்றும் கட்டாயமல்ல,ராஜபக்ஷர்களின் மீளெழுச்சியைக் கண்டு எதிர்க்கட்சியினர் அச்சமடைந்துள்ளார்கள்.

சமூக வலைத்தளங்களில் வெறுக்கத்தக்க வகையில் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீது நாட்டு மக்கள் இன்றும் நம்பிக்கை கொண்டுள்ளார்கள். அவரது தலைமைத்துவத்திலான அரசாங்கத்தை கோருகிறார்கள். 

இந்நிலையில் இன்றையதினம் தேசிய மாநாட்டில் அவர் முக்கிய செய்தியை நாட்டு மக்களுக்கு வழங்குவார் என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *