பாடசாலை மாணவர்களுக்கு கொவிட் தடுப்பூசியை செலுத்த தடுப்பூசி தொடர்பான தேசிய குழு, பரிந்துரை முன்வைத்துள்ளதாக அரச மருந்தாக்கல் கூட்டுதாபனத்தின் தலைவர் விசேட வைத்தியர் டொக்டர் பிரசன்ன குணசேன தெரிவிக்கின்றார்.
இந்த பரிந்துரை எதிர்வரும் காலத்தில் அனுமதிக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, நாட்டிற்கு இதுவரை சுமார் இரண்டு கோடியே 20 லட்சம் கொவிட் தடுப்பூசிகள் கிடைத்துள்ளதாகவும், மேலும் ஒரு கோடியே 30 லட்சம் தடுப்பூசிகள் கிடைக்க வேண்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.





