பாகிஸ்தானிலிருந்து இலங்கைக்கு வரவுள்ள பெரிய வெங்காயம்…!தடை விதித்த இந்தியா…!samugammedia

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த சில வாரங்களாக பெரிய வெங்காயத்தின் விலை 500 ரூபாயை கடந்த நிலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

இவ்வாறானதொரு பின்னணியில் பெரியவெங்காயத்தின் விலை உயர்வை கட்டுப்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் தற்போது நடவடிக்கை எடுத்துள்ளது.

அந்தவகையில், பெரிய வெங்காயத்தை பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்வது தொடர்பில்  அரசு கவனம் செலுத்தியுள்ளது.

இந்தியாவில் பெரிய வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் பெரிய வெங்காயத்தை இறக்குமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply