தனியார் மயமாக்கலுக்கு எதிர்ப்பு…! பதவியை தூக்கியெறிந்த மில்கோ நிறுவன தலைவர்…!samugammedia

மில்கோ நிறுவனத்தின் தலைவராக கடமையாற்றிய ரேணுக துஷ்யந்த பெரேரா தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

இதன்படி, அவர் இந்த இராஜினாமா கடிதத்தை நிதி அமைச்சின் செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ளார்.

இந்த நிலையில் பணிபுரிய இன்னும் ஒரு மாதம் உள்ள போதிலும் உள்ளூர் மற்றும் இந்திய நிறுவனத்துடன் இணைந்து மில்கோ நிறுவனத்தை தனியார் மயமாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதால் பதவி விலக முடிவு செய்துள்ளதாக கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply