உலக மக்கள் அனைவருக்கும் அன்பும், அமைதியும் நிறைந்த பண்டிகையாக இம்முறை அமைய வேண்டும் – ஜனாதிபதி விடுத்துள்ள நத்தார் வாழ்த்து செய்தி…!samugammedia

எதிர்பார்ப்புக்களைப் புதுப்பிப்பதற்கான கடமை மற்றும் பொறுப்புக்களை நிறைவேற்றி அனைவருக்கும் புதிய எதிர்பார்ப்புக்களை தோற்றுவிக்கும் திருநாளாக இம்முறை நத்தார் பண்டிகை அமையபிரார்த்திப்போம் என ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்க விடுத்துள்ள நத்தார் தின வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

பல்வேறு சவால்கள் நம்முன் நிற்கின்ற தருணத்தில், நாம் நத்தார் பண்டிகையைக் கொண்டாடுகின்றோம்.

நாட்டின் சவால்களின் உண்மைத் தன்மையை அறிந்துகொண்டு, பொறுப்புகளை நிறைவேற்றுவதற்காக அனைவரும் ஒன்றுபட வேண்டுமென அழைப்பு விடுக்கும் அதேநேரம், உலக மக்கள் அனைவருக்கும் அன்பும், அமைதியும் நிறைந்த பண்டிகையாக இம்முறை நத்தார் பண்டிகை அமைய என வாழ்த்துகிறேன் என்றும்  ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply