கட்டணம் செலுத்தாத 95,000 பேரின் நீர் விநியோகம் துண்டிப்பு..!

கடந்த ஒக்டோபர் மாதம் வரை கட்டணம் செலுத்தாத 95,000 க்கும் அதிகமான வாடிக்கையாளர்களின் நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி அக்டோபர் 31ஆம் திகதியுடன்  துண்டிக்கப்பட்ட குடிநீர் இணைப்புகளின் எண்ணிக்கை 95,241 ஆகும். 

மேலும் 12.97 பில்லியன் ரூபா நிலுவைத் தொகையை வாடிக்கையாளர்களிடம்  வசூலிக்க வேண்டியுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

Leave a Reply