மத்திய மலைநாட்டில் கடந்த சில வாரங்களாக பெய்து வரும் கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் பெருந்தோட்ட மக்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.
இதுதொடர்பாக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் கருத்து தெரிவிக்கையில் வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் மட்டுமே தங்களுக்கு பெருந்தோட்டங்களில் பணி தருவதாகவும்,
அதற்கு மேலாக பணிக்கு நாளாந்தம் தாங்கள் பரிக்கும் பச்சை கொழுந்திற்க்கு 50/= அல்லது 40/= ரூபாய் வீதம் பறிக்கப்படும் கொழுந்துக்கு கணக்கிட்டு வேதணம் வழங்க படுகின்றது என மிக வேதனை உடன் தெரிவிக்கிறனர்.
மத்திய மலை நாட்டில் பெய்து வரும் கனமழையால் தேயிலை செடிகளில் பச்சை குழந்தை இல்லை எனவும் குறைந்தபட்சம் 20 கிலோ பச்சைக் கொழுந்தை பரித்தால் மாத்திரமே முறையான வேதனம் கிட்டும் என்று கூறுவதுடன், இக்காலகட்டத்தில் அவ்வாறு 20 கிலோ பச்சை கொழுந்தினைப் பரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது, என அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரையான காலப்பகுதியில் தங்கள் கொள்கை பறிக்க செல்லும்போது அங்கு அட்டை கடி தாங்கமுடியாத நிலையில் உள்ளதாக குற்றச்சாட்டு முன் வைக்கின்றனர். வாரத்தின் ஏழு நாட்களில் 6 நாட்கள் தங்களுக்கு பெருந்தோட்டங்களில் பணி வழங்க வேண்டுமென அவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுக்கின்றனர்





