இலங்கை சுங்கத்துறைக்கு கிடைத்த அதிக வருமானம்…!samugammedia

இலங்கை சுங்கத்துறை வரலாற்றில் கடந்த ஆண்டு  970 பில்லியன் ரூபாயை ஈட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, முன்னதாக கடந்த  2018ஆம் ஆண்டில் ஈட்டப்பட்ட 923 பில்லியன் ரூபாய் வருமானமே இதுவரையில் இலங்கை சுங்கத்தின் வரலாற்றில் ஈட்டபட்ட அதிக வருமானமாக பதிவாகியிருந்த நிலையில், இறக்குமதி கட்டுப்பாடுகளை கருத்தில் கொண்டு, அந்த இலக்கை 893 பில்லியன் ரூபாயாக திருத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply