யானையிடம் சிக்கிய மீன் வியாபாரிக்கு ஏற்பட்ட நிலை…!samugammedia

யானையின் திடீர் தாக்குதலில் சிக்கி மீன் வியாபாரி  படுகாயமடைந்துள்ளார்.

இச் சம்பவம் வாகனேரி பகுதியில் இடம்பெற்றுள்ளது. 

ஓட்டமாவடி – மீராவோடை நூராணியா வீதியைச் சேர்ந்த 52 வயதுடைய மீன் வியாபாரி  

இன்றையதினம்(03)  காலை,  மீன் வியாபாரத்துக்கு செல்லும் போதே இவ்வாறு யானை தாக்கி படுகாயமடைந்துள்ளார்.

யானை தாக்குதலுக்குள்ளான மீன் வியாபாரி  வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

அண்மைக்காலமாக யானையின் தாக்குதலில் சிக்கி பலர் உயிரிழந்த சம்பவங்கள் பதிவாகிவரும் நிலையில் இதனை கட்டுப்படுத்த அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply