நிலவும் சீரற்ற காலநிலை…! 38,075 பேர் பாதிப்பு…!samugammedia

நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையால் 11241குடும்பங்களை சேர்ந்த 38,075 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் அறிக்கை வெளியிட்டுள்ளது 

தொடர் மழையினால் நீர் நிலைகள் நிரம்பி வழிவதுடன் தாழ்நிலப்பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளது 

பதுளை மாவட்டத்தில் 701 குடும்பங்களைச்சேர்ந்த 2370 பாதிக்கப்பட்டுள்ளதுடன் 1078 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 142 குடும்பங்களை சேர்ந்த 3 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

இரத்தினபுரி மாவட்டத்தில் 2 குடும்பங்களை சேர்ந்த 6 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 2 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது 29 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கேகாலை மாவட்டத்தில் 2 குடும்பங்களை சேர்ந்த 7 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 2 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

திருகோணமலை மாவட்டத்தில் 521 குடும்பங்களை சேர்ந்த 1400 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 2 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.776 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அம்பாறை மாவட்டத்தில் 5982 குடும்பங்களை சேர்ந்த 20092 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 163 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்;துள்ளதுடன் 4 பேர் காயமடைந்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 3462 குடும்பங்களை சேர்ந்த 12133 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 15 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது. 95 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

நுவரெலியா மாவட்டத்தில் 61 குடும்பங்களை சேர்ந்த 213பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 45 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது 61 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மாத்தளை மாவட்டத்தில் 117 குடும்பங்களை சேர்ந்த 342 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் 50 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது 185 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கண்டி மாவட்டத்தில் 226 குடும்பங்களை சேர்ந்த 861 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 58 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

குருனாகல் மாவட்டத்தில் 6 குடும்பங்களை சேர்ந்த 18 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 6 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 57 குடும்பங்களை சேர்ந்த 232 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 9 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது 1 வீடு முழுமையாக சேதமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply