நாளுக்கு நாள் தீவிரமடையும் பொலிஸாரின் யுக்திய விசேட நடவடிக்கை…! மேலும் 955 சந்தேக நபர்கள் கைது…!samugammedia

போதைப்பொருள் மற்றும் பாதாளக் குழுக்களை ஒடுக்கும் ‘யுக்திய’ பொலிஸ் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில்  கடந்த 24 மணித்தியாலங்களில் 955 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை, கடந்த இரு வாரங்களுக்கு மேலாக நாடளாவிய ரீதியில் 607 பொலிஸ் நிலையங்களை உள்ளடக்கிய வீதித் தடைகளில் பொலிஸ் நாய்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் இந்திக்க ஹப்புகொட தெரிவித்துள்ளார்.

குறித்த நடவடிக்கையின் போது ஏராளமான போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் ஆயிரக்கணக்கான சந்தேக நபர்கள்  இது வரை கைதுசெய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\

Leave a Reply