இன்றைய ராசி பலன்கள் – 12.01.2024 samugammedia

மேஷம்

குழந்தைகளிடத்தில் அனுசரித்துச் செல்லவும். வீடு மற்றும் வாகனங்களை சீர் செய்வீர்கள். வியாபாரத்தை விரிவாக்கம் செய்யும் எண்ணம் மேம்படும். எடுக்கும் காரியம் சிறிது முயற்சிக்குப் பின் நடைபெறும்.உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக பணியாற்ற வேண்டி இருக்கும்.

ரிஷபம்

உறவினர்களிடத்தில் பொறுமை வேண்டும்.எண்ணங்களில் மாற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் புதிய பொறுப்பு கிடைக்கும். இன்று பணிகளை செய்து முடிக்க தேவையான வசதி வாய்ப்புகள் கிடைக்கும். தேவையற்ற வார்த்தைகளை தவிர்ப்பது நன்மை தரும். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி நீடிக்கும். பிள்ளைகள் முன்னேற்றத்தில் அக்கறை காட்டுவீர்கள். தந்தையின் உடல்நலத்தில் கவனம் தேவை.

மிதுனம்

வரவைவிட செலவுகள் மேம்படும். நினைத்தது ஒன்றாகவும் நடப்பது வேறாகவும் அமையும். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. வியாபாரத்தில் சகிப்புத்தன்மையுடன் செயல்படவும்.எடுத்த காரியம் நல்லபடியாக முடிய வேண்டும் என்ற மனக்கவலை ஏற்படும். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் தேடிவரும். 

கடகம்

நண்பர்களின் ஆதரவுடன் சில செயல்களை செய்து முடிப்பீர்கள். முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். வியாபாரத்தில் வரவுகள் மேம்படும். மேலதிகாரிகள் ஆதரவாக செயல்படுவார்கள். நிதானமாக செயல்படவும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த சிக்கல்கள் தீரும். ஆசிரியர்களின் ஆலோசனை கூடுதல் மதிப்பெண் பெற உதவும். 

சிம்மம்

கடன் தொல்லை குறையும். நண்பர்கள் பற்றிய புரிதல் மேம்படும். எதிர்பாராத சில வரவுகளால் கையிருப்புகள் அதிகரிக்கும். வியாபார அணுகுமுறைகளில் சில மாற்றங்கள் ஏற்படும். உத்தியோகத்தில் மேன்மை உண்டாகும். நீங்கள் எடுத்த காரியத்தை நிதானமாக செய்து முடிப்பீர்கள். வெளியில் தங்கும் சூழல் ஏற்படும். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும்.

கன்னி

உறவினர்களின் வருகை மகிழ்ச்சி அளிக்கும். நிதானமான செயல்களால் நன்மை ஏற்படும். குடும்ப நபர்களிடம் மனம் திறந்து பேசுவது நல்லது. செலவு நிறைந்த நாள். நிதி உதவி கிடைக்கும். வாடிக்கையாளர் மத்தியில் மதிப்பு கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கலாம். 

துலாம்

பயணங்களால் புதிய அனுபவம் ஏற்படும். சிந்தனையின் போக்கில் தெளிவு உண்டாகும். கோபத்தை குறைத்துக் கொள்ளவது நல்லது. உடல் ஆரோக்கியம் மேம்படும். புதிய வேலையை தொடங்குவீர்கள். இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். கணவன் மனைவிக்கிடையே இதுவரை இருந்து வந்த கருத்து வேற்றுமை நீங்கி நெருக்கம் அதிகரிக்கும். 

விருச்சிகம்

சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். நினைத்த சில காரியத்தை செய்து முடிப்பீர்கள். பிடிவாத போக்கை தளர்த்திக் கொள்ளவும். இன்று மிக கவனமாக பேசுவதும், கோபத்தை குறைப்பதும் நன்மை தரும். எதிர்பார்த்த பணஉதவி கிடைக்கும். வரவேண்டிய பணம் கைக்கு வந்து சேரும். இரவு பகலாக உழைக்க வேண்டி இருக்கும்.

தனுசு

எதிர்பாராத பண வரவு கிடைக்கும். சகோதரர்களுடன் அனுசரித்து செல்லவும். வீடு மாற்றம் தொடர்பான சிந்தனை அதிகரிக்கும். வியாபாரத்தில் சூட்சுமங்களை அறிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் உழைப்பிற்கான அங்கீகாரம் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றம் காணப்படும். எதிர்கால கல்வி பற்றிய சிந்தனை மேலோங்கும்.

மகரம்

வீண் கோபத்தை தவிர்க்கவும். நிதானமான செயல்கள் நன்மை தரும். நெருக்கடிகள் உண்டாகும். உத்தியோகத்தில் பொறுப்பு அதிகரிக்கும். இன்று மற்றவர்கள் மீது பரிவுகாட்டும் குணம் மேலோங்கும். சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள். பணம் வருவது அதிகரிக்கும். வெளியூர் பயணங்கள் சாதகமான பலன் தரும். 

கும்பம்

திடீர் செலவுகள் உண்டாகும். மனைவி வழி உறவுகளால் அலைச்சல் ஏற்படும். புதிய நபர்களால் சில மாற்றங்கள் உண்டாகும். மனதளவில் தெளிவு கிடைக்கும். பணி நிமிர்த்தமான பயணம் உண்டாகும். இன்று மற்றவர்களின் நலனுக்காக வாதாடி வெற்றி பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் உண்டாகலாம். புதிய பொறுப்புகள் கிடைக்கும்.

மீனம்

சகோதரர்களால் அனுகூலம் உண்டு. வரவுகளால் சேமிப்புகள் அதிகரிக்கும். நினைத்த காரியம் நிறைவேறும். உத்தியோகத்தில் முன்னேற்றம் உண்டாகும். இன்று குடும்பத்தில் சுக சௌக்கியம் உண்டாகும். நீண்ட நாட்களாக இருந்த பிரச்சனைகள் தீரும். கணவன் மனைவிக்கிடையே அன்பான நிலை காணப்படும். பிள்ளைகளின் அறிவு திறமை வெளிப்படும். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *